என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏடிஎம் மையம்"
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் இலுப்பைபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது24). இவர் நத்தத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் போட சென்றிருந்தார். அப்போது அங்கு அறிமுகம் இல்லாத வாலிபர் ஒருவர் நான் பணத்தை ஏ.டி.எம்.-ல் போடுகிறேன் என்று சொல்லி அந்த பெண்ணிடம் வாங்கி விட்டார்.
பின்னர் பணத்தை போடுவதுபோல் சைகை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிசென்றுவிட்டார்.
இதுகுறித்து நத்தம் போலீசில் ஈஸ்வரி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர் சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (23) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் அந்த பெண்ணிடமிருந்து ரூ.39ஆயிரத்து 500 மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நத்தம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இ-கார்னர் வசதியுடன் பணம் எடுக்க, செலுத்த எந்திரங்கள் உள்ளன. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெளியூரில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர்
மேலும் வேலைக்கு செல்பவர்கள், உதவி தொகை பெறுபவர்கள் என ஏராளமானோர் இந்த மையத்தை பயன்படுத்தி வந்தனர். வங்கியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் பணம் செலுத்த ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை.
24 மணி நேர சேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 24 மணி நேரமுமே வேலை செய்யவில்லை என்ற அறிவிப்பு பலகை மட்டுமே தொங்குகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் அலைந்து பணம் எடுத்து வருகின்றனர். மேலும் வேறு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில் கூறுகையில், ஏ.டி.எம். சேவை முடங்கியது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து குறைந்த பட்ச நிலுவைத் தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அதற்கான பராமரிப்பு இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. அரசு அலுவலர்கள், விவசாயிகள் என பலர் இப்பகுதியில் உள்ள 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.
அந்த 2 தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. தனியார் வங்கி சார்பில் 1 ஏ.டி.எம். மையம் உள்ளது. இவற்றில் பெரும்பாலும் தனியார் வங்கி ஏ.டி.எம்.முறையாக இயங்கி வருகிறது. ஆனால் தேசியமயமாக்கப்பட் வங்கி ஏ.டி.எம்.களில் பெரும்பாலும் பணம் இருப்பதில்லை. இதுமட்டுமின்றி சில நேரங்களில் மிஷின்கள் இயங்குவதில்லை.
இதனால் மாத தொடக்கத்தில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் திண்டுக்கல் வந்து பணம் எடுத்து செல்கின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலும் ஊழியர்கள் பயன் படுத்துவதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையங்களில் நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஸ் நிலையம் அருகே உள்ள பஜார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டிஎம். வழியாக தான் நகை கடை, ஜவுளி கடைகளுக்கு செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.
இந்த நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ஏ.டி.எம். எந்திரத்தினை உடைக்க முயன்றார். அதற்குள் ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஏ.டி.எம். மையத்தில் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்ட பொதுமக்கள் போளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்து வாலிபர் யார்? எதற்காக ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்தார். திருடும் நோக்கில் வந்தாரா? அல்லது குடிபோதையில் உடைத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி கிடையாது.
திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இயங்கி வரும் இந்த மையத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
எந்திரத்தை உடைத்து அதில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையர்கள் நீண்ட நேரம் போராடி, முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் கண்ணாடி கதவினை உடைத்து சென்றுள்ளனர்.
இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஏ.டி.எம். மையத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் யாரும் வந்ததால் முயற்சியை கைவிட்டு ஓடினார்களா? குடிபோதையில் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. #ATM #ATMBroken
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து நேற்று காலை அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதாக அவர்களது செல்போனுக்கு மெசேஜ் வந்தது.
ஏ.டி.எம். டெபிட் கார்டு தங்களிடம் இருக்கும் போது பணம் எப்படி எடுக்கப்பட்டது? என்று அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாளிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
பணத்தை இழந்த அனைவரும் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அருகில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 2-ந் தேதி பணம் எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். ஆனால் தடயம் எதுவும் சிக்கவில்லை.
ஒரே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து சில மணி நேர இடைவெளியில் பணம் திருடப்பட்டுள்ளது. எனவே மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமராவை பொருத்தி டெபிட் கார்டுகள் பற்றிய தகவல்கள் மற்றும் பின் நம்பர்களை தெரிந்து கொண்டு, அதன்மூலம் போலி டெபிட்கார்டுகளை தயாரித்து பணத்தை திருடி இருக்கலாம் என கருதுகின்றனர்.
எனவே ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
போலி டெபிட் கார்டுகள் தயாரித்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளதால் இதில் தொழில் நுட்ப விவரங்கள் தெரிந்த ‘ஹை-டெக்’ கும்பல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது,
சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் திருடப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுரிபாளையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, மைக்ரோ கேமராக்களை மர்மநபர்கள் பொருத்தியிருந்தது தெரிய வந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தது.
ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதே நபர்கள் இங்கும் கைவரிசை காட்டினார்களா? என விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்